search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியானா சிறுவன் கொலை எதிரொலி: மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளிகளே பொறுப்பு - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
    X

    அரியானா சிறுவன் கொலை எதிரொலி: மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளிகளே பொறுப்பு - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

    பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என சி.பி.எஸ்.இ. வாரியம் அறிவித்து இருப்பதுடன், புதிய வழிகாட்டு நெறிகளையும் வெளியிட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    அரியானாவின் குர்கானில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 2-ம் வகுப்பு மாணவன் சமீபத்தில் பள்ளி பேருந்து நடத்துனர் ஒருவரால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டான். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயன்ற போது இந்த கொலை நடந்தது. இதைப்போல டெல்லி பள்ளியில் 5 வயது சிறுமி ஒருவர் பள்ளி ஊழியரால் கற்பழிக்கப்பட்டாள்.

    இந்த சம்பவங்கள் மாணவர்களின் பெற்றோரிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்து பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என சி.பி.எஸ்.இ. வாரியம் அறிவித்து இருப்பதுடன், புதிய வழிகாட்டு நெறிகளையும் வெளியிட்டு உள்ளது.

    குறிப்பாக பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், மாணவர்களின் உளவியல் செயல்பாடு ஆய்வு, பாதுகாப்பு தணிக்கை, பாதுகாப்பு தேவைகளை கண்டறிய பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் குழுக்கள் அமைத்தல், போலீஸ் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட விதிமுறைகளை சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது.

    அதன்படி, ‘மாணவ-மாணவிகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதுகாப்பு உணர்வுடன் கல்வி பயில்வதற்கு ஏற்ற சூழலை பெறுவது அவர்களது அடிப்படை உரிமையாகும். இந்த வசதிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டியது பள்ளி நிர்வாகங்களின் பொறுப்பு’ என பள்ளிகளை சி.பி.எஸ்.இ. வலியுறுத்தி உள்ளது. 
    Next Story
    ×