search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்
    X

    மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்

    மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், பிரெய்லி பேப்பர் உள்ளிட்ட உபகரணங்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கு மாற்றுத்திறனாளிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது இந்த வரியை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. நிபுன் மல்கோத்ரா என்ற மாற்றுத்திறனாளி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய நிதி அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். முன்னதாக இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கு நீதிபதிகள் தயக்கம் காட்டியது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×