search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய ஜனாதிபதிக்கு முதல் மனுவை அனுப்பிய முன்னாள் நீதிபதி கர்ணன்: தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை
    X

    புதிய ஜனாதிபதிக்கு முதல் மனுவை அனுப்பிய முன்னாள் நீதிபதி கர்ணன்: தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி கர்ணன், தண்டனையை ரத்து செய்யக்கோரி புதிய ஜனாதிபதிக்கு மனு அனுப்பி உள்ளார்.
    புதுடெல்லி:

    கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றிய கர்ணனுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த கர்ணன் ஓய்வு பெற்றநிலையில், கடந்த மாதம் 20–ந்தேதி கோவையில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கொல்கத்தா அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், நாட்டின் புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு முதல் மனுவை முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் மனு அனுப்பி உள்ளார். அதில், தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


    புதிய ஜனாதிபதி பதவி ஏற்ற சில நிமிடங்களில் அவருக்கு முதல் மனு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர், கூடுதல் செயலாளர் மற்றும் தனி செயலாளருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. நேரடியாகவும் மனுவை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என கர்ணனின் வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.

    முன்னதாக, பரோல் வழங்கக் கோரி மேற்கு வங்க ஆளுனர் கேசரி நாத் திரிபாதிக்கு கர்ணன் கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×