search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மாற்று கொள்கைகளுடன் களமிறங்க வேண்டும்: நிதிஷ்குமார்
    X

    பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மாற்று கொள்கைகளுடன் களமிறங்க வேண்டும்: நிதிஷ்குமார்

    பா.ஜ.க. அரசை எதிர்ப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாற்றுக் கொள்கைகளுடன் முன் வர வேண்டும் என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
    பாட்னா:

    பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு நிதிஷ்குமார் பதில் அளித்தார். நிதிஷ் பேசியதன் விவரம்:-

    மத்திய அரசினை எதிர்ப்பது என்பது எதிர்க்கட்சிகளின் கடமை. நாட்டின் நலனுக்காக நம்மிடம் மாற்று கொள்கைகள் இருக்க வேண்டும். அரசுக்கு எதிராக விளக்கங்கள் மட்டும் அளிப்பது போதுமானது அல்ல. காங்கிரஸ் மிகப் பெரிய கட்சி, அது மாற்று கொள்கைகளை வழங்க வேண்டும்.

    எதிர்ப்பதற்காக கொள்கைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பது மட்டும் போதாது. எதிர்க்கட்சிகள் மாற்று கொள்கைகளுடன் வர வேண்டும்.

    நாம் விவசாயிகளின் பிரச்சனையை மறந்துவிட்டோம், காங்கிரஸ் கட்சிக்குள் உள்ளவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களை வைத்துள்ளனர். இதனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பா.ஜ.க. அரசுக்கு எதிராக எடுபடவில்லை.

    காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே மாற்று கருத்து நிலவி வருகிறது என்பதில் உண்மையில்லை. அதேபோல், மகா கூட்டணிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. 2019 தேர்தலில் நான் எதிர்க்கட்சிகள் சார்பில் நான் பிரதமர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்று ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். 

    இவ்வாறு தெரிவித்தார்.

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போது, நிதிஷ்குமார் மட்டும் ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×