search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்த பிரிவில் மட்டும் ரூ.1,470 கோடி வருமானம் ஈட்டிய இந்திய ரயில்வே
    X

    இந்த பிரிவில் மட்டும் ரூ.1,470 கோடி வருமானம் ஈட்டிய இந்திய ரயில்வே

    2016-2017 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் ரயில்வே டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டதில் மட்டும் ரூ.1470 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்திய ரயில்வேயின் தகவல் அமைப்புகளில் இருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
    இந்தூர்:

    இந்தியாவில் 2016 - 2017 வரையிலான நிதியாண்டில் மட்டும் ரயில்வே டிக்கெட் ரத்து செய்யப்பட்டதன் மூலம் ரூ.1470 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 25.29 சதவிகிதம் அதிகம் ஆகும்.

    இந்திய ரயில்வேயின் மத்திய தகவல் மையத்தில் இருந்து இத்தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அமைப்பு மத்திய ரயில்வேயின் கீழ் இயங்கி வருகிறது. மத்திய அரசின் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சந்திரதேகர் கௌத் என்பவர் எழுப்பிய கேள்வியின் மூலம் இத்தகவல்கள் கிடைத்துள்ளது.

    இந்திய ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு செய்து, பின் அவை ரத்து செய்யப்பட்டதன் மூலம் 2016-2017 வரையிலான காலகட்டத்தில் ரூ.1470 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2015-2016 வரையிலான காலகட்டத்தில் இந்த தொகை ரூ.1123 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



    இந்திய ரயில்வே முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களை ரத்து செய்வதன் மூலமாகவும் வருவாய் ஈட்டி வருகிறது. அதன்படி 2016-2017 நிதியாண்டில் இந்திய ரயில்வே ரூ.17.87 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. முன்னதாக 2015-2016 வரையிலான காலகட்டத்தில் ரூ.17.23 கோடியாக இருந்தது.
    Next Story
    ×