search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்: டெல்லியிலிருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி
    X

    அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்: டெல்லியிலிருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

    அமெரிக்கா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக செல்லும் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை புறப்பட்டார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி போர்ச்சுகல், நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக செல்கிறார். முதலில் போர்ச்சுகல் நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி பின்னர், 25 மற்றும் 26 தேதிகளில் அமெரிக்காவில் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அந்நாட்டுக்கு முதன்முதலாக செல்லும் பிரதமர் மோடி - டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமெரிக்க பயணத்தை தொடர்ந்து 27-ம் நெதர்லாந்து நாட்டுக்கு செல்லும் மோடி அங்கிருந்து டெல்லி திரும்புகிறார்.

    இந்த சந்திப்பின்போது மேற்கண்ட நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகலாம். என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×