search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: டி.எஸ்.பி அடித்துக் கொலை - நம்பிக்கையின் மீதான தாக்குதல் என முதல்வர் கண்டனம்
    X

    காஷ்மீர்: டி.எஸ்.பி அடித்துக் கொலை - 'நம்பிக்கையின் மீதான தாக்குதல்' என முதல்வர் கண்டனம்

    காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி மர்மகும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நம்பிக்கையின் மீதான தாக்குதல் என அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜாபியா மசூதிக்கு வெளியே போலீஸ் டி.எஸ்.பி. முகமத் அயுப் பண்டித் என்பவர் நேற்று மாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

    அப்போது 200 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. கூட்டத்தில் இருந்து தப்பிக்க டி.எஸ்.பி. துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். என்றாலும் கும்பல் தொடர்ந்து தாக்கியது. டி.எஸ்.பி. சுயநினைவு இழந்து மயங்கி விழுந்தார்.



    உடனே அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். இறந்த டி.எஸ்.பி. சாதாரண உடையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மசூதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில்தான் அவரது வீடு உள்ளது. அவர் யார் என்று தெரியாமல் இருந்தது. செல்போனில் குடும்பத்தினர் தொடர்பு கொண்ட பிறகுதான் அடையாளம் தெரிந்தது.

    ஸ்ரீநகரில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. டி.எஸ்.பி. கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் அடையாளம் தெரிய வந்தது. இன்று காலையில் கொலையுண்ட டி.எஸ்.பி.யின் இறுதிச் சடங்கு நடந்தது.



    இந்நிலையில், போலீஸ் டி.எஸ்.பி. முகமத் அயுப் பண்டித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி, “போலீஸ் டி.எஸ்.பி மீதான தாக்குதல் நம்பிக்கையின் மீதான தாக்குதல்” என கண்டனம் தெரிவித்தார்.

    காஷ்மீர் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் காலித் ஜெஹாங்கீர் கூறும்போது, “கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டைத் தாண்டி இருக்கும் தங்கள் முதலாளிகளை சந்தோஷப்படுத்த சிலரின் அடியாட்கள் மக்களையும் போலீசையும் அடித்துக் கொல்வதில் சாடிச இன்பம் அடைகின்றனர்.’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×