search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்கியதில் பாதுகாப்பு படையின் தொழில்நுட்ப ஊழியர் பலி
    X

    எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்கியதில் பாதுகாப்பு படையின் தொழில்நுட்ப ஊழியர் பலி

    காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய ராணுவ தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இருவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய ராணுவ தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இருவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

    காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இருக்கும் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவுஷேரா பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி மோட்டார் குண்டுகளால் தாக்கினர். 

    மேலும், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்னகாதி செக்டார் அருகே இன்று காலை சுமார் 7.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிறிய ரக குண்டுகளால் இந்திய கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

    பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த தாக்குதலுக்கு இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினரின் சார்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு 
    வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவ தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், ஓட்டுநர் ஒருவரும், பாதுகாப்பு படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தற்போது வரை இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே லேசன துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×