search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலியான 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்-அமைச்சர் உத்தரவு
    X

    மின்சாரம் தாக்கி பலியான 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்-அமைச்சர் உத்தரவு

    மின்சாரம் தாக்கி பலியான 11 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல் -அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பாலூர் கிராமம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டம், சவுரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வன் ஏ.நிமிலன் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், மேலூர் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கம் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டம், நாரணம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், முடுக்கன்துறை கிராமத்தைச் சேர்ந்த வீரமணி ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

    சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், அமாணி கொண்டலாம்பட்டி கிராமத்தில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்த எம். கோவிந்தராஜன் திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஊனை வாணியம்பாடி மதுரா ஏரிப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் ஜெயக்குமார், மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், ஊர்மெச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 11 பேர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 11 பேர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×