search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரிஅனந்தன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    குமரிஅனந்தன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

    தலைசுற்றல் காரணமாக காந்தி பேரவை தலைவர் குமரிஅனந்தன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    காந்தி பேரவை தலைவர் குமரிஅனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டிசம்பர் 10-ந் தேதி, ராஜாஜி பிறந்த நாளையும், அவரால் இந்தியாவிலேயே முதன் முதலாக 1917-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு நூறாண்டு நினைவு விழாவையும் சேலத்தில் கொண்டாடும் விதத்தில் பேரணியாக தேசிய நண்பர்களுடன் நடந்து சென்று காந்தி, வள்ளுவர், அண்ணா ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து, ராஜாஜியின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினேன். ராஜாஜி மதுவிலக்கை கொண்டு வந்ததைப் பாராட்டி மதுவிலக்கின் தந்தை என்று நேரு பாராட்டியதையும், சேலம் நகரசபை மக்களுக்கு குடிதண்ணீர் குழாயினை திறக்கும் பொறுப்பை அரிஜன மக்களுக்கு கொடுத்தது போன்ற பணிகளை பாராட்டிப் பேசினேன்.

    இன்று (நேற்று) பாரதியார் பிறந்த நாளில் அவர் உருவச் சிலையை பாரதி அன்பர்களோடு நானும் தோள் கொடுத்துத் தூக்கி வந்தேன். சில நாட்கள் எனக்கு ஏற்பட்டிருந்த தலைசுற்றல் தாங்க முடியாத அளவு அதிகரித்து விட்டதால் சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்று ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாகச் சேர்த்துவிட்டார்கள்.

    சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதால், குமரி மாவட்ட விவசாயிகள், மீனவர்களின் அவலநிலையை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதாக நண்பர்களிடம் சொல்லியிருந்தபடி செயல்பட முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×