search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி 7-வது நாளாக தொடரும் கிராம மக்களின் போராட்டம்
    X

    பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி 7-வது நாளாக தொடரும் கிராம மக்களின் போராட்டம்

    பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் தொடர்ந்து ஏழாவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது மாணிக்காபுரம் ஊராட்சி. இந்த பகுதியில் கடந்த 11-ந் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    கடந்த 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனர். பின்னர் புதிய டாஸ்மாக் கடை அருகே உள்ள விவசாய நிலத்தில் கொட்டகை போட்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். 17-ந் தேதி முதல் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், மாணவ- மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பொதுமக்களின் போராட்டம் தீவிரமானதை தொடர்ந்து திருப்பூர் டாஸ்மாக் மண்டல மேலாளர் துரை, பல்லடம் தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கிராம மக்கள், டாஸ்மாக் கடை மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம். அதுவரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என கூறினர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி முதல் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த கிராம மக்கள் விடிய விடிய உண்ணாவிரத பந்தலிலேயே இருந்தனர். இன்று உண்ணாவிரதத்தை 3-வது நாளாக தொடர்ந்தனர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், கலந்து கொண்டனர்,

    டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்களின் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 7 நாட்களாகிறது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், கொ.ம.தே.க. ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×