search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த மழையால் அணைக்கட்டு பேயாற்றில் வெள்ளம்: விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    பலத்த மழையால் அணைக்கட்டு பேயாற்றில் வெள்ளம்: விவசாயிகள் மகிழ்ச்சி

    அணைக்கட்டு வழியாக ஓடும் பேயாற்றில் மழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அல்லேரிமலை பகுதியில் இருந்து பேயாறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு வரதலம்பட்டு வழியாக ஓடி 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து பாலாற்றில் போய் சேருகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பெய்த பலத்த மழையால் பேயாற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழை வெள்ளத்தால் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் விவசாய கிணறுகளில் நீர்மட்டமும் உயரும்.

    அணைக்கட்டு, பள்ளிகொண்டா மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்திருந்தால் ஒரு மாதத்துக்கு பேயாற்றில் பயங்கர வெள்ளம் ஏற்பட்டு இருக்கும். நேற்று இரவு முதல் அதிகாலை வரை பெய்த பலத்த மழை திடீரென நின்று விட்டதால், பேயாற்றில் மழை வெள்ளம் அதிகமாக ஓடி சற்று குறைந்து விட்டது. தொடக்கத்தில் 3 அடி உயரத்துக்கு சென்ற மழை வெள்ளம், தற்போது குறைந்து ஒரு அடி உயரத்துக்கு ஓடுகிறது.

    இந்த மழை வெள்ளம் 10 நாட்களுக்கு ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடும் வறட்சியில் இருந்து வந்த அணைக்கட்டு, பள்ளிகொண்டா, வெட்டுவாணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் தற்போது மழை வெள்ளத்தால் செழிப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை வெள்ளத்தால் என்னை போன்ற பல்வேறு விவசாயிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துள்ளனர். விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் பயிர் சாகுபடியை மேற்கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×