search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தமிழக விவசாயிகள் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செங்கோடன், மாவட்ட செயலாளர்கள் சக்திவேல், குப்புசாமி, மாவட்ட பொருளாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி ஒன்றிய செயலாளர் செல்வம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தின் போது காய்ந்து போன கரும்பு பயிர்களை கைகளில் ஏந்தியபடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் ஆறுகளில் உபரியாக செல்லும் தண்ணீரை மின் மோட்டார்கள் மூலம் ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். காய்ந்து போன கரும்பு பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் நீர்வளத்தை பெருக்க எண்ணேகொல்புதூர் தடுப்பணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் தும்பலஅள்ளி கால்வாய் திட்டம், நல்லம்பள்ளி கோம்பை மாரியம்மன் கோவில் அணை திட்டம், அன்னியாளம் தூள்செட்டி ஏரி- தும்பலஅள்ளி கால்வாய் திட்டம் ஆகிய நீர்பாசன திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும். வத்தல்மலைக்கு பாதுகாப்பான சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர்கள் அண்ணாமலை, முனிராஜிலு, மாவட்ட பிரசாரக்குழு செயலாளர் நாகராஜ், மாவட்ட பட்டுப்பிரிவு செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேசன், செயலாளர் சேட்டு உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். 
    Next Story
    ×