search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரம், காங்கயம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் - கலெக்டர் ஆய்வு
    X

    தாராபுரம், காங்கயம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் - கலெக்டர் ஆய்வு

    தாராபுரம் மற்றும் காங்கேயம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சலை பரப்பக் கூடிய கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    காங்கயம்:

    பின்னர் கலெக்டர் பழனிசாமி பேசியதாவது:-

    சுகாதாரப் பணியா ளர்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகை யில் பொது மக்களின் வீடு களுக்கு நேரில் சென்று சுகாதார விழிப்புணர்வை ஏற் படுத்த வேண்டும் .

    பொது மக்கள் குடிநீரி னை சேமித்து வைக்கும் பாத்திரங்களை பாது காப்பாக மூடி வைக் கவும், தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்கா தவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், கோவில்கள் ஆகிய இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் தனி கவனம் செலுத்தி கொசு உற்பத்தியை தடுப்பதன் மூலம் காய்ச்சல் பரவுவதை தடுக்க இயலும்.

    தற்போது காய்ச்சல் சீசனாக உள்ளதால், மருத்து வர்களின் ஆலோசனைப் பெற்று மருந்துகள் எடுத்துக்கொள்ளவேண்டும். தொடர்ந்து 3 நாள் காய்ச்சல் இருந்தால் ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்திடும் வகையில் நிலவேம்பு குடிநீர் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பழனிசாமி கூறி னார்.

    இதில் தாராபுரம் தாசில்தார்கிருஷ்ணவேனி, காங்கேயம் தாசில்தார் வெங்கடலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×