search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அடுப்புகளை சுத்தம் செய்வதும் பராமரிப்பதும்
    X

    அடுப்புகளை சுத்தம் செய்வதும் பராமரிப்பதும்

    சமையலறையில் தினசரி சமைக்க உதவும் அடுப்புகள் தூய்மையாக இருப்பதன் மூலமே ஆரோக்கியமான சமையல் மேற்கொள்கிறோம் என்பது உறுதியாகும்.
    சமையலறையில் தினசரி சமைக்க உதவும் அடுப்புகள் தூய்மையாக இருப்பதன் மூலமே ஆரோக்கியமான சமையல் மேற்கொள்கிறோம் என்பது உறுதியாகும். முன்பு விறகு அடுப்புகள் எனும்போது வீடுகள் முழுக்க கரும்புகையும், எண்ணெய் பிசுக்கும் ஏற்பட்டு அதிக வேலைப்பளுவை ஏற்படுத்தின. தற்போது எல்லோர் வீடுகளிலும் பளபள கண்ணாடி மேற்புற அமைப்பு கொண்ட கேஸ் அடுப்புகள் தான்.

    கேஸ் அடுப்புகள்தான் என்றாலும் அதனையும் பராமரிப்பதும், சுத்தம் செய்வதும் தவிர்க்க முடியாத ஒன்று. கேஸ் அடுப்பில் சமைத்தாலும் அதன் மேல் மற்றும் உட்புற பகுதிகள் அனைத்தும் அதிக அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுக்குகளால் நிறைந்து அதன் அழகை இழந்து விடுகின்றன. எனவே எந்தவகை அடுப்புகள் ஆனாலும் குறிப்பிட்ட இடைவெளியில் அதனை சுத்தம் செய்து பராமரிப்பது நமது பாதுகாப்பிற்கு மட்டுமல்ல சிறந்த சமையலுக்கும் உத்தரவாதம் தரும்.

    கேஸ் பர்னர்களை சுத்தம் செய்வது :

    ரப்பர் குழாய் வழியே வரும் கேஸ் பர்னர் மூலம் வெளிவந்து காற்றுடன் கலந்து தீக்குச்சியின் மூலம் பற்ற வைக்கப்படும்போது எரிந்து தன் பணியை செய்கிறது. இவ்வாறு பர்னரில் வெளிவரும் தீயானது நீலநிறத்தில் எரிதல் வேண்டும். அடுப்பில் எரியும் சுடரானது நீலநிறத்தில் எரியாமல் மஞ்சள் நிறத்தில் எரிந்தால் பர்னர்களில் ஏதோ அடைப்பு அல்லது சுத்தம் அற்ற தன்மை உள்ளது என அறிதல் வேண்டும். அப்போது பர்னர்களை எடுத்து கொதிக்கின்ற நீரில் கழுவி உள்ளே அடைத்திருக்கும் உணவு துகள்கள், கரித்துகள்கள் போன்றவற்றை சுத்தம் செய்து மீண்டும் அடுப்பில் பொருத்த வேண்டும்.



    கேஸ் அடுப்பின் டியூப் மற்றும் ரெகுலேட்டர் கவனிப்பு :

    நாம் தினசரி கேஸ் அடுப்பினை பயன்படுத்தும் முன் ரெகுலேட்டர் இயக்கம் சரிவர உள்ளதா? டியூப்கள் சரிவர இணைந்துள்ளதா என அறிய வேண்டும். டியூப்கள் மீது ஏதும் கூர்மையான பொருட்கள் படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். சரியான கால இடைவெளியில் டியூப் மாற்றப்பட வேண்டும். அதிக நாட்கள் பயன்படுத்திய டியூப்கள் வெடிப்புகள் மற்றும் பிளவுகள் ஏற்பட்டு கேஸ் வெளியேற்றத்திற்கு வழி வகுக்கும். சிறந்த ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட டியூப்களை தான் போட வேண்டும். தரமற்ற டியூப்கள் பாதுகாப்பற்றவை.

    எண்ணெய் பிசுக்குகளை துடைக்கும் வழிமுறை :

    ஸ்டீல் மற்றும் கண்ணாடி மேற்புற கேஸ் அடுப்புகளாக இருந்தாலும் தினசரி பயன்பாட்டில் எண்ணெய் பிசுக்குகள் அதிக அளவில் படிந்து விடும். எண்ணெய் பிசுக்குகள் சில சமயம் டியூப்களின் மீதும் படியும். எனவே எண்ணெய் பிசுக்குகளை துடைத்து எடுப்பதே பெரும் பணியாக திகழும். எந்தவித மேற்புற பகுதியாயினும் சோப்புநீர் அல்லது உப்பு கலந்த தண்ணீரில் கொஞ்சம் பேப்பர் கொண்டு நனைத்து பிசுக்குகள் உள்ள இடத்தில் துடைத்தால் போதும்.

    கழுவுகிறேன் என்று அதில் சோப்பு தண்ணீரை ஊற்றி உட்புற பாகங்களில் தண்ணீர் சேர்ந்து விரைவாய் துருபிடித்து விடும். மேலும் தற்போது ஆட்டோமெடிக் இன்னைட் பயன்பாடு கொண்ட அடுப்புகள் தான் உள்ளன. இதில் தண்ணீர் ஊற்றினால் சீக்கிரமே ஆட்டோ இன்னைட் வேலை செய்யாது. எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து பூசிவிட்டு பின் துடைத்தாலும் கண்ணாடி பளபளவென தெரியும். அதிக பிசுக்கு நிறைந்த துணியைவிட பழைய செய்தி தாள்கள் நன்றாக சுத்தம் செய்ய உதவி புரிகின்றன.

    அதுபோல் தினசரி சமையலில் உடனுக்குடன் துடைத்து சுத்தம் செய்து விட்டால் அதிக பிசுபிசுப்பு ஏற்படாது.
    Next Story
    ×