search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கணவர் ஊரில் இல்லாத போது மனைவி ஃபீல் பண்ணும் விஷயங்கள்
    X

    கணவர் ஊரில் இல்லாத போது மனைவி ஃபீல் பண்ணும் விஷயங்கள்

    கணவன் ஊரில் இல்லாத நேரத்தில் அவர்கள் ஜமாய்க்கும் விஷயங்கள் என்ன, செம்மையா ஃபீல் பண்ணி மிஸ் பண்ணும் விஷயம் என்ன என்பது பற்றி நாம் இங்கே பார்க்கலாம்.
    பொண்டாட்டிக்கு பதில், கணவன் ஊருக்கு போயிட்டா… வீட்டில் இருக்கும் மனைவி எப்படி எல்லாம் உணர்வார்கள், கணவன் இல்லாத நேரத்தில் அவர்கள் ஜமாய்க்கும் விஷயங்கள் என்ன, செம்மையா ஃபீல் பண்ணி மிஸ் பண்ணும் விஷயம் என்ன என்பது பற்றி தான் நாம இங்க பேசப்போறோம்…

    * கணவன் வேலைக்கும் போவது முதல், வேலை விட்டு வீடு திரும்பிய பிறகு என நேரத்திற்கு சில வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்காது.

    * கணவன் - மனைவிக்கு மத்தியில் வாரம் ஒருமுறையாவது சண்டை வருவது இயல்பு. அந்த சண்டை சச்சரவுகளுக்கு லீவாக அமையும் இந்த பிரிவு.

    * இரண்டு, மூன்று நாட்களில்.. மேலும், கணவன் பிரிந்து சென்ற இரண்டு மூன்று நாட்களில் அவர்களை மிஸ் செய்வது போன்ற உணர்வு மனைவிக்குள் அதிகரிக்க ஆரம்பிக்கும். தான் தனியாக இருப்பது போன்று உணர்வார்கள். இந்த நேரத்தில் காதல் அதிகரிக்கும்.



    * என்னதான் அடித்தாலும், பிடித்தாலும் கணவன் - மனைவி தானே. கணவன் இல்லாத போது எப்போதுமே மனைவி பாதுகாப்பின்மையை உணர்வதுண்டு.

    * மார்கெட் செல்வது, மளிகை கடையில் பொருட்கள் வாங்கி தருவது, பில் கட்டுவது போன்ற சின்ன, சின்ன உதவிகளுக்கு ஆள் இல்லாமல் தவிப்பார்கள். சமாளிப்பது கடினம்! சில வீட்டில் அப்பாவுக்கு பயந்தாவது குழந்தைகள் லூட்டி அடிக்காமல் அமைதியாய் இருப்பார்கள். மேலும், பருவ குழந்தைகள் அப்பா இல்லாத போது தான் வெளியே அதிகம் நேரம் செலவழிப்பார்கள். இதை எல்லாம் சமாளிக்க முடியாமல் தவிப்பார்கள்.

    * வீட்டில் ஆண்கள் இருந்தால் பெரும்பாலும் நியூஸ் சேனல் தான் ஓடும். பிரேக்கிங் நியூஸ் மட்டுமே திரும்ப, திரும்ப பார்ப்பார்கள். கணவன் இல்லை எனில், சந்தோசமாக தங்களுக்கு பிடித்த சேனல் பார்ப்பார்கள்.

    * பெரும்பாலும், கணவன் இல்லாத போது தான் தங்கள் வீட்டுக்கு தோழிகளை அழைத்து அதிக நேரம் செலவழிப்பார்கள். எனவே, வீடு களைக்கட்டும்.
    Next Story
    ×