search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சமூகத்தில் பெண்கள் மீதான கண்ணோட்டம்
    X

    சமூகத்தில் பெண்கள் மீதான கண்ணோட்டம்

    ஒரு செயலை ஆண் செய்யும் போதும் ஒரு விதமாக அணுகும் சமூகம் பெண்கள் செய்யும் போது வேறு வித கண்ணோட்டத்தில் அணுகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    இந்த சமூகம் ஆண்கள் மற்றும் பெண்களால் கட்டமைக்கப்பட்டதுதான். ஆனால் நடை, உடை, பாவனை போன்றவற்றில் இருவரையும் இந்த சமூகம் பார்க்கும் பார்வை என்னவோ வித்தியாசம். ஒரு செயலை ஆண் செய்யும் போதும் ஒரு விதமாக அணுகும் சமூகம் பெண்கள் செய்யும் போது வேறு வித கண்ணோட்டத்தில் அணுகும். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

    தனது மகனை வேலைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூட பெற்றோர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால் ஒரு சிறந்த நிறுவனத்தில் பணிலும் அது இரவு பணியாக இருந்தால் தனது மகளை பக்கத்து நகருக்கு அனுப்பக்கூட எந்த பெற்றோர்களும் தயாராக இல்லை என்பது உண்மை.

    பெண்கள் பிறரிடம் சிரித்து பழகினால், அவர்களது அணுகுமுறைய பாராட்டுவார்கள், ஏனெனில் அவள் இனிமையாக பழகுகிறாள், ஆனால் ஆண் சிரித்தால், பிறரிடம் ஜொள்ளு வடிக்கும் ஆண்கள் என்று கூறுவார்கள்.

    இதில், இன்னெரு ரகமும் உண்டு, ஒரு பெண் பொது இடத்தில் சத்தமாக சிரித்து பேசினால் அதிகப்பிரசங்கித்தனம், அநாகரீகம் என்பார்கள். அதுவே ஒரு ஆண் சத்தமாக சிரித்தால் அது நாகரீகம் என்பார்கள்.



    ஒரு ஆணுக்கு தான் விரும்பிய நண்பர்களுடன் சுற்றும் வாய்ப்பை அளிக்கும் சமூகம். பெண்களூக்கு அளிப்பதில்லை. ஆண் என்பவன் இரவு எத்தனை மணிக்கு என்றாலும் வீட்டுக்கு வரலாம். ஆனால் பெண்களுக்கு இரவில் தோழிகளுடன் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. ஆண் எத்தனை நண்பர்கள் வேண்டுமென்றாலும் வைத்து கொள்ளலாம்.

    எப்படி உடையணிய வேண்டும், மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும், எப்படி பழக வேண்டும் என்று எதற்கெடுத்தாலும் பெண்களுக்கு உபதேசம் செய்யும் பெற்றோர்கள். ஆண்களுக்கு அதை சொல்லி கொடுப்பதற்கு தவறி விடுகின்றனர்.

    அமைதி குணம் என்பது பொதுவாக பெண்களுக்கே உரித்தான ஒன்றாக கூறப்படுகிறது, ஒரு பெண் அமைதியாக இருந்தால் அடக்க ஒடுக்கமும் நிறைந்த பெண் என்பார்கள்.

    மொத்தத்தில், இந்த சமூகம் ஆண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் எனவும் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் எனவும் சில கருத்துக்களை கூறுகின்றனர்.
    Next Story
    ×