search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தித்திப்பான பேரீச்சம்பழம் - அன்னாசிப்பழ கீர்
    X

    தித்திப்பான பேரீச்சம்பழம் - அன்னாசிப்பழ கீர்

    குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பேரீச்சம்பழம், அன்னாசிப்பழத்தை வைத்து சூப்பரான தித்திப்பான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நன்கு பழுத்த அன்னாசிப்பழம் - ஒன்று,
    சர்க்கரை - ஒரு கப்,
    பாதாம் பருப்பு - 50 கிராம்,
    பால் - 1/2 லிட்டர்,
    பேரீச்சம்பழம் - 100 கிராம்,
    முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை - தலா 25 கிராம்,
    குங்குமப்பூ - சிறிதளவு,
    ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்.

    செய்முறை :

    பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி மையாக அரைத்து கொள்ளவும்.

    அன்னாசிப்பழத்தை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கவும்.

    மிக்சியில் பொடியாக நறுக்கிய அன்னாச்சிபழம், பேரீச்சம் பழம் இரண்டையும் போட்டு நன்றாக அரைத்து, சாறை வடித்தெடுக்கவும்.

    இதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்துக் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    பழச்சாறு கொதித்துக் கெட்டியானதும் கீழே இறக்கவும்.

    முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து கொள்ளவும்.

    பாலை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சி அத்துடன், அரைத்த பாதாம் பருப்பு, பழச்சாறு இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, ஏலக்காய் பொடி ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் கிளறி கீழே இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான அன்னாசிப்பழ கீர் ரெடி.

    இதை குளிர வைத்தும் சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×