search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அசைவம் சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
    X

    அசைவம் சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

    சிக்கன், மட்டன், மீன், இறால், சுறா என எந்த அசைவ உணவாக இருந்தாலும் ஒரு பிடிப்பிடிக்கும் நபரா நீங்க? சிக்கன், மட்டன் அதிகமா சாப்பிடுவீங்களா? அப்ப இத நீங்க தான் முதல்ல படிக்கணும்.
    சிக்கன், மட்டன், மீன், இறால், சுறா என எந்த அசைவ உணவாக இருந்தாலும் ஒரு பிடிப்பிடிக்கும் நபரா நீங்க? சிக்கன், மட்டன் அதிகமா சாப்பிடுவீங்களா? அப்ப இத நீங்க தான் முதல்ல படிக்கணும். ஒருவேளை திடீர் என்று நீங்களாகவோ அல்லது டயட், உடல் குறைப்பு அறிவுரை காரணமாக இறைச்சி உண்பதை கைவிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் உருவாகும் என தெரியுமா?

    1. மூன்றில் இருந்து ஐந்து கிலோ வரை உடல் எடை குறைய வாய்ப்புகள் உள்ளது.

    2. 24% இதய நோய் ஏற்படும் விகிதம் குறையும்.

    3. இறைச்சியில் அதிக புரதசத்து இருக்கிறது, இதனால், உடலில் புரதச்சத்து குறைபாடு ஏற்படலாம்.



    4. உடல் சூடு மற்றும் உடல் சூடு காரணமாக ஏற்படும், சூட்டுக் கொப்பளம், வாய்ப்புண் போன்றவை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

    5. மட்டனில் கொழுப்பு அதிகம் ஆதலால், இதை தவிர்க்கும் போது, உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவு குறைய வாய்ப்புகள் உண்டு.

    6. செரிமான கோளாறுகள் குறையும், செரிமான மண்டலம் இலகுவாகும்.

    7. நீங்கள் நாள் முழுக்க உடல் உழைப்பு சார்ந்த வேலை செய்கிறீர்கள் என்றால், சைவம், அசைவம் என்ற பாகுபாடு உடல் அறியாது. கலோரிகள் முற்றிலும் கரைக்கப்பட்டுவிடும். இந்த அபாயங்கள் எல்லாம் மூளைக்கு மட்டும் வேலை தரும் வகையில் வேலை செய்பவர்களுக்கு தான் பொருந்தும்.
    Next Story
    ×