search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உற்சவ அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்த காட்சி. (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்.)
    X
    உற்சவ அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்த காட்சி. (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்.)

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

    சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆடிக் கடைசி வெள்ளியன்று நாடி வரும் பக்தர்களை தேடி வந்து அருள்பாலிக்கும் உற்சவ அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த வருவார்கள். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆடி கடைசி வெள்ளி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஆடி கடைசி வெள்ளி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று மதியம் உற்சவ அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பல்வேறு மண்டகபடியில் தங்கி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். பின்னர் மாலை 6 மணிக்கு சப்ர பவனி நடைபெற்றது.

    அர்ச்சுனாநதி வழியாக சென்ற சப்ர பவனி மீண்டும் கோவிலை வந்தடைந்தது. திருவிழா நாளான நேற்று மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முடி காணிக்கை செலுத்தினர். மேலும் அம்மனுக்கு மாவிளக்கு, அக்னிச்சட்டி, ஆயிரங்கண் பானை சுமந்தும், வெள்ளியில் செய்யப்பட்ட கண், காது ஆகியவற்றை அளித்தும், ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை பலி கொடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    Next Story
    ×