search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மீண்டும் தள்ளிப்போகும்`வேலையில்லா பட்டதாரி 2 ரிலீஸ்
    X

    மீண்டும் தள்ளிப்போகும்`வேலையில்லா பட்டதாரி 2' ரிலீஸ்

    சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் - கஜோல் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    'வேலையில்லாப் பட்டதாரி' படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி இருக்கிறது. இந்த படத்தை ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிறார். தனுஷ் - அமலாபால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார். படத்தின் பாடல்கள், டிரைலர், பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் என அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போகிறது.

    முன்னதாக படத்தை தனுஷின் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. பின்னர் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருந்த `விவேகம்' படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.



    இதையடுத்து நடிகர் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ரகுவரன் வர்றான் டீசருடன், `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் புதிய ரிலீஸ் தேதி இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று தனுஷ் அறிவித்திருக்கிறார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் `வி' கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
    Next Story
    ×