புதுவையில் திமுகவின் துரோகத்தால் காங்கிரஸ் தோற்றது- நாராயணசாமி தாக்கு

தேர்தலில் வென்ற அனைத்து முதல்-அமைச்சர்களும் டெல்லி சென்று சம்பிரதாயமாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி இதுவரை சந்திக்கவில்லை.
இராட்டை சத்தியாகிரகம் நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி
Published on

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயகத்தை காக்க சத்தியாகிரகம் நிகழ்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் நாடு முழுவதும் சத்தியாகிரகம் நடத்தப்படுகிறது.

ஜனநாயகத்தை காக்க இராட்டை சத்தியாகிரகம் புதுவை பத்துக்கண்ணுவில் நடந்தது. இதில் தேசிய தலைவர் சுனில்பன்வார் பங்கேற்றார். நிகழ்வில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா என நாடு முழுவதும் கட்சிகளை உடைத்து ஆட்சியை பாஜகவினர் மாற்றுகின்றனர். தேர்தலில் வெற்றி பெறும் எம்எல்ஏ, எம்பிக்களை விலைக்கு வாங்கி பலமான கட்சி என்கின்றனர். இதை எதிர்த்துதான் அமைதி போராட்டம் நடத்துகிறோம்.

புதுவையில் காங்கிரஸ் கட்சி தவறுகளால் தோற்றோம். நம் கூட்டணி கட்சியான திமுக, காங்கிரசுக்கு துரோகம் செய்து விட்டது. இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டோம். காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் கூட்டணியில் இருக்க ராகுல் விரும்பியதை பயன்படுத்தி கொள்ளாததால் நாம் தோல்வியடைந்தோம்.

புதுவையில் பதவி சண்டை, அதிகார சண்டை நடக்கிறது. சபாநாயகர் பதவியை பாஜக கேட்டு அதைத்தர ரங்கசாமி மறுக்கிறார். இரண்டு கட்சிகளும் தங்களுக்குள் சண்டையிட்டு புதுவையை குட்டிச்சுவராக்குகின்றனர். இதில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தேர்தலில் வென்ற அனைத்து முதல்-அமைச்சர்களும் டெல்லி சென்று சம்பிரதாயமாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி இதுவரை சந்திக்கவில்லை. இப்படிட்ட மோசமான நிலையில் ஆட்சி மாட்டிக்கொண்டு முழிக்கிறது.

இலவச அரிசியோடு பருப்பு, எண்ணெய், கோதுமை தருவோம் என கூறியும் வழங்கவில்லை. துரோகத்தால் தோற்றோம். துரோகிகளை மக்களுக்கு தெரியும். காங்கிரஸ் புத்துயிர் பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com