அ.தி.மு.க. உறுப்பினர் சேர்ப்பு: 31-ந்தேதிக்குள் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்

அ.தி.மு.க. உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பங்களை 31-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அ.தி.மு.க. உறுப்பினர் சேர்ப்பு: 31-ந்தேதிக்குள் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்
Published on

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்ப படிவங்கள் கடந்த ஜனவரி 29-ந்தேதி முதல் தலைமை கழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

அதே போல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களும் கடந்த 1-ந்தேதி முதல் தலைமைக் கழகத்தில் பெறப்பட்டு வருகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி, ஒன்றிய, வார்டு, நகர, பேரூராட்சி, வட்ட, பகுதி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரில் ஒருவரது கையெழுத்து பெற்று வருகிற 31-ந்தேதிக்குள் உரிய கட்டணத்துடன் ஒப்படைக்க வேண்டும்.

இதில் பெறப்படும் விண்ணப்ப படிவங்களுக்கு மட்டுமே உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் ஸ்ரீதர் நாராயணன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவதாக” தெரிவித்துள்ளனர். #Tamilnews

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com