search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    முந்தைய மாடல்களில் அப்படியில்ல.. பேட்டரி விஷயத்தில் மாஸ் காட்டும் ஐபோன் 15.. ஆப்பிள் அதிரடி
    X

    முந்தைய மாடல்களில் அப்படியில்ல.. பேட்டரி விஷயத்தில் மாஸ் காட்டும் ஐபோன் 15.. ஆப்பிள் அதிரடி

    • செயல்திறன் தொடர்பான விவரங்களை ஆப்பிள் நிறுவனம் மாற்றியுள்ளது.
    • பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களிலேயே ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் பேட்டரி ஆயுள் அதிகளவில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ஐபோன் 15 சீரிசில் உள்ள பேட்டரி திறன் அதன் முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டுள்ளதை விட இருமடங்கு அதிகமுறை சார்ஜ் செய்யும் போதும் ஆயுளை தக்கவைத்துக் கொள்ளும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    புதிய ஐ.ஒ.எஸ். 17.4 அப்டேட் மூலம் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் அதன் செட்டிங்ஸ்-இல் போன் பேட்டரி ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை டிஸ்ப்ளே செய்கிறது. பேட்டரி மற்றும் செயல்திறன் தொடர்பான விவரங்களை ஆப்பிள் நிறுவனம் மாற்றியுள்ளது. இதில் ஐபோன் 15 சீரிஸ் பேட்டரி ஆயுள் மேம்படுத்தப்பட்டுள்ளது.


    "ஐபோன் 15 மாடல்களின் பேட்டரிகள் ஆயிரம் முறை சார்ஜ் செய்த பிறகும் 80 சதவீதம் திறனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது," என பேட்டரி குறித்த தரவுகளில் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடல்களின் பேட்டரிகள் 500 முறை சார்ஜ் செய்த பிறகு 80 சதவீதம் திறனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டன.

    குறிப்பிட்ட நிலைகளில் ஐபோன் 15 சீரிசை சார்ஜிங் மற்றும் பயன்பாடுகளின் கீழ் பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. மேலும் ஐபோனின் பேட்டரி பாகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு சிஸ்டத்தை தொடர்ந்து மேம்படுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    Next Story
    ×