search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    பன்ச் ஹோல் ஸ்கிரீன், பெரிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஐபோன் 16
    X

    பன்ச் ஹோல் ஸ்கிரீன், பெரிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஐபோன் 16

    • வழிமுறையை மாற்றுவது குறித்து ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • பன்ச் ஹோல் ரக டிசைனை ஆப்பிள் பரிசோதனை செய்து வருகிறது.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 15 சீரிஸ் வரை தனது டிஸ்ப்ளேக்களில் நாட்ச் ரக டிசைனை வழங்குவதில் மிகவும் கவனமாக இருந்துள்ளது. எனினும், ஏற்கனவே உள்ள டிசைனில் மென்பொருள் மாற்றங்களை செய்து 'டைனமிக் ஐலேண்ட்' எனும் அம்சத்தினை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் ஸ்கிரீனில் அதிக இடவசதியை வழங்கியதோடு, சிறப்பான அனுபவத்தை வழங்கியது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 16 ப்ரோ மாடலில் தற்போதைய வழிமுறையை மாற்றுவது குறித்து ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோ மாடலில் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே வழங்க ஆப்பிள் திட்டமிடுவதாக தெரிகிறது.

    டிப்ஸ்டரான மஜின் பு வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 ப்ரோ மாடலின் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருக்கிறார். பன்ச் ஹோல் ரக டிசைனை ஆப்பிள் பரிசோதனை செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    அந்த வகையில், இந்த டிசைன் கொண்ட மாடல் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது பற்றிய தகவல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் தற்போதைய ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் இருப்பதை விட அளவில் பெரிய டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    அடுத்த தலைமுறை ஐபோன் மாடல்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், இவற்றில் பெரும்பாலானவை உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது. அடுத்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம்- ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்யலாம்.

    Next Story
    ×