search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சக்திவாய்ந்த M4 சிப்செட் உடன் ஐபேட் ப்ரோ அறிமுகம் - ஆப்பிள் அசத்தல்
    X

    சக்திவாய்ந்த M4 சிப்செட் உடன் ஐபேட் ப்ரோ அறிமுகம் - ஆப்பிள் அசத்தல்

    • புதிய ஐபேட் ப்ரோ மாடல் இருவித அளவுகளில் கிடைக்கிறது.
    • ஐபேட் ப்ரோவுடன் மேஜிக் கீபோர்டு அறிமுகம்.

    முற்றிலும் புதிய ஐபேட் ஏர் மாடல்களை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐபேட் ப்ரோ மாடல் மூலம் ஆப்பிள் முதல்முறையாக OLED டிஸ்ப்ளேக்களை வழங்கியுள்ளது. புதிய ஐபேட் ப்ரோ மாடல் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது.

    புதிய ஐபேட் ப்ரோ மாடல் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பிராசஸர் ஆகும். இது முந்தைய பிராசஸர்களை விட அதிவேக செயல்திறன் வழங்கும் திறன் கொண்டுள்ளது.


    மென்பொருள் சார்ந்த எடிட்டிங் அம்சங்களை கொண்டிருக்கும் புதிய ஐபேட் ப்ரோ, மேம்பட்ட ஆடியோ எடிட்டிங் வசதி கொண்டுள்ளது. இத்துடன் தலைசிறந்த கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. இத்துடன் கேமரா சென்சார் லேண்ட்ஸ்கேப் பக்கமாக மாற்றப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபேட் ப்ரோவுடன் மேஜிக் கீபோர்டும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேஜிக் கீபோர்டு மாடல் புதிய ஐபேட் ப்ரோவுடன் ஒற்றுப்போகும் வகையில் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய ஆப்பிள் பென்சில் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    முற்றிலும் புதிய ஆப்பிள் பென்சில் - ஆப்பிள் பென்சில் ப்ரோ என அழைக்கப்படுகிறது. இந்த சாதனம் ஏராளமான புதிய வசதிகளை கொண்டிருக்கிறது. மேம்பட்ட ஐபேட் ப்ரோ 256 ஜி.பி., 512 ஜி.பி., 1 டி.பி. மற்றும் 2 டி.பி. என நான்குவித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    Next Story
    ×