search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெட் விமானம்"

    • ஒரு 'பேஷன் ஷோ' நிகழ்ச்சி பார்க்க சென்ற போது எனது நிலைமை மாறியது
    • விடாமுயற்சி, போராடும் குணம் தான் எனக்கு வெற்றியை தேடித் தந்தது.

    பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக பல்வேறு வணிகத்திலும் அவர் ஈடுபட்டு உள்ளார். 

    மும்பை மாநகரத்தின் மைய பகுதியில் 'பாஸ்டியன் உணவகம்' என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றும் நடத்தி வருகிறார்.இந்த உணவகம் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது.  48 வயதாகும் ஷில்பா தற்போது பஞ்சாபி இல்லத்தரசி கேரக்டரில் ஒரு இந்தி படத்திலும் நடித்து உள்ளார்.

    நடிகை ஷில்பா ஷெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது :-




    எனது திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்தில் தயாரிப்பாளர்களிடம் இருந்து பல நிராகரிப்பு, அவமானங்களை நான் சந்தித்தேன். ஏமாற்றம், மனச்சோர்வு அடைந்தாலும் முயற்சியை கைவிடவில்லை.

    நான் ஒல்லியாகவும், உயரமாகவும் இருந்தேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் நான் என் தந்தையுடன் வேலை செய்ய விரும்பினேன். புதிதாகவும் சிறப்பாகவும் ஏதாவது செய்ய வேண்டும் என எனக்கு ஆசை இருந்தது.

    இந்நிலையில் ஒரு 'பேஷன் ஷோ' நிகழ்ச்சி பார்க்க சென்ற போது எனது நிலைமை மாறியது. ஒரு புகைப்படக்கலைஞர் என்னை படம் எடுத்தார். அதன் மூலம் பேஷன் துறைக்கு அறிமுகமானேன்.அதன் பிறகு எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது.



    நான் நடிக்க வந்தபோது எனக்கு வயது 17. அப்போது நான் உலகத்தைப் பார்க்கவில்லை, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவில்லை.இந்தியில் பேசத் தெரியாமல், கேமரா முன் நிற்பதை நினைத்து பதட்டமாக இருந்தது. அதன்பின் முயற்சி செய்து நடித்து பிரபலமானேன்

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்கள் பாகுபாடு காட்டியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் நான் விடாப்பிடியாக இருந்தேன். இவ்வளவு தூரம் வந்த பிறகு ஒரு அடி கூட பின்வாங்க மனமில்லை.




    நான் வெற்றி பெற்ற பிறகு, என்னை பலர் பாராட்டினர். எனது விடாமுயற்சி, போராடும் குணம் தான் எனக்கு வெற்றியை தேடித் தந்தது. தற்போது நான் ஒரு வலிமையான சுதந்திர பெண்ணாகவும், நடிகையாகவும், மனைவியாகவும், தாயாகவும் உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

    ஷில்பா ஷெட்டி தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை மணந்தார். இவர்களுக்கு வியான் மற்றும் ஷமிஷா என இரு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு ஆடம்பர பங்களா உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. மேலும் ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமாக 'ஜெட்' விமானம் ஒன்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்தது.
    • விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியது.

    மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஜெட் விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆறு பயணிகள், இரண்டு பணியாளர்கள் என எட்டு பேர் இந்த ஜெட் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் காயமுற்றனர். இந்த சம்பம் இன்று (செப்டம்பர் 14) மாலை 5.02 மணிக்கு அரங்கேறி இருக்கிறது.

    நல்ல வேளையாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்ததும், இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியது. எனினும், மீட்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தது.

     

    விபத்தைத் தொடர்ந்து ஓடுபாதையில் இருந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, முறையான பாதுகாப்பு பரிசோதனைகள் நிறைவு பெற்று, அதனை தேசிய விமான போக்குவரத்து துறை உறுதிப்படுத்திய பிறகே ஓடுபாதையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

    இந்த விபத்து மும்பை விமான நிலையத்தின் 27-வது ஓடுபாதையில் ஏற்பட்டது. மழை காரணமாக பாதையில் வழுவழுப்பாக இருந்ததும், 700 மீட்டர்கள் வரை பார்க்கக்கூடிய நிலை இல்லை என்று கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து ஓடுபாதையில் மற்ற விமானங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இதன் காரணமாக கிட்டத்தட்ட ஐந்து விமானங்கள் மற்ற ஓடுபாதை வழியாக கிளம்பி சென்றன. விபத்தில் சிக்கியது லியர்ஜெட் 45 ரக ஜெட் விமானம் ஆகும். இதனை கனடாவை சேர்ந்த வான்வழி போக்குவரத்து நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த விமானம் வி.எஸ்.ஆர். வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்து இருக்கிறது.

    ×