search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "and what to avoid"

    • நீண்ட ஆயுள் வாழ்வதற்கும் உடற் பயிற்சி அவசியமானது.
    • உடற்பயிற்சியின்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள்.

    உடல் நலனை பேணுவதற்கும், நோய் நொடியின்றி நீண்ட ஆயுள் வாழ்வதற்கும் உடற் பயிற்சி அவசியமானது என்பதை இளைய தலைமுறையினர் உணர தொடங்கி இருக்கிறார்கள். சமூக ஊடகங்கள், இணையங்களில் பகிரப்படும் வீடியோக்களை பார்த்து உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள். உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று உடலுக்கு தகுந்த பயிற்சிகளை செய்வதே சரியானது. உடற்பயிற்சியின்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்ளாவிட்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். உடற்பயிற்சியின்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    * உடற்பயிற்சியின்போது வியர்வை வெளியேறும். அதிலும் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யும்போது வியர்வையின் அளவு அதிகரிக்கக்கூடும். அந்த சமயங்களில் கைகளால் வியர்வையை அடிக்கடி துடைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வியர்வையை துடைக்கும்போது கைவிரல்களின் அழுத்தம் சருமத்தில் உள்ள துவாரங்களை அடைத்துவிடும். அதனால் வியர்வை துளிகள் படிந்து அதன் வழியாக கிருமிகள் ஊடுருவி சரும பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

    * வியர்வையை துடைப்பதற்கு மென்மையான டவலையே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்திய டவலை உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    * உடற்பயிற்சி செய்யும் பெண்கள் இறுக்கமாகவோ, தளர்வாகவோ கூந்தல் அலங்காரம் செய்யக்கூடாது. ஏனெனில் உடற்பயிற்சியின்போது வெளியேறும் வியர்வை கூந்தலில் படிந்து, முடி உதிர்வுக்கோ, முடி உடைவதற்கோ காரணமாகி விடும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் தேய்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    * மேக்கப்புடன் உடற்பயிற்சியில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவை சரும துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி வியர்வை வெளியேறுவதை தடுத்துவிடும். முகப்பருக்கள், தோல் ஒவ்வாமை ஏற்படவும் காரணமாகிவிடும்.

    * உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு வாசனை திரவியங்களை (சென்ட்) உடலில் பூசுவதையும் தவிர்க்க வேண்டும். அவை வியர்வையில் கலந்து சரும பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். வேண்டுமானால் மென்மையான மாய்ஸ்சரைசரும், ஆயில் ஜெல்லும் பயன்படுத்தலாம்.

    * உடற்பயிற்சி செய்து முடித்ததும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே தலையில் வியர்வை படிந்திருக்கும் என்பதால் அதை போக்க ஷாம்பு போட்டு குளிக்கலாம். உடற்பயிற்சியை முடித்ததும் சில நிமிடங்கள் கழித்து அதிக தண்ணீர் பருக வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும், சரும நலனை பராமரிக்கவும் அது உதவும்.

    ×