search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்குப்பதிவு நேரத்தை காலை 6 முதல் இரவு 7 மணி வரை நீட்டிக்க வேண்டும்: கர்நாடக பாஜக வலியுறுத்தல்
    X

    வாக்குப்பதிவு நேரத்தை காலை 6 முதல் இரவு 7 மணி வரை நீட்டிக்க வேண்டும்: கர்நாடக பாஜக வலியுறுத்தல்

    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வெளியே வந்து வாக்களிக்க சிரமமாக இருக்கும்.
    • 37 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டி வதைக்கிறது.

    கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. 14 இடங்களுக்கு ஏற்கனவே முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. 2-வது கட்டமாக வருகிற 7-ந்தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    தற்போது நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. மக்கள் வெளியேற வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இதற்கு வெயில் முக்கிய காரணம்.

    வழக்கமாக காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளரக்ள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வெயில் காரணமாக வாக்குப்பதிவு நேரத்தை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நீட்டிக்க வேண்டும் என கர்நாடகா மாநில பா.ஜனதா தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.

    கார்நாடகா மாநில பா.ஜனதா அந்த மனுவில் "காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை வாக்களிக்க மக்கள் வெளியே வருவது மிகவும் கடினமானதாக இருக்கும். 14 தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு கர்நாடகாவில் வெப்பநிலை 37 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை இருந்து வருகிறது. அபாய நிலையை வெப்பநிலை எட்டியுள்ளது. இது தேர்தல் நாளில் மக்கள் வாக்களிக்க கஷ்டமானதாக இருக்கும். வாக்குப்பதிவை சிறப்பாக நடத்த, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×