என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வாக்கு சதவீதம் குறித்து கடிதம்: மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
- தேர்தல் வாக்குப்பதிவு சதவீத தரவுகள் திருத்தப்பட்டது குறித்து கார்கே கடிதம்.
- வாக்குப்பதிவு குறித்த தரவுகள் முரண்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இதுவரை இல்லாத வகையில் மிகவும் குறைவாக உள்ளது.
பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. வாக்குப்பதிவு காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். சில காரணங்களுக்கான ஒன்றிரண்டு இடங்களில் நேரம் மாற்றப்படலாம்.
வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தோராயமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்குள் சரியான வாக்குப்பதிவு தரவுகள் வெளியிடப்படும். ஆனால் முதற்கட்டம் மற்றும் 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிறகும் வாக்குப்பதிவு தரவுகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் திருத்தம் செய்து வெளியிடப்பட்டது. ஐந்து முதல் ஆறு சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியிருந்ததாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். தேர்தல் ஆணையமும் விளக்கம் அளித்திருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவரும், இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான மல்லிகார்ஜூன கார்கே, இது தொடர்பாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில் வாக்குப்பதிவு சதவீத தரவுகள் குறித்த முரண்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இதுவரை இல்லாத வகையில் மிகவும் குறைவாக உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் ஆணையம் மீது சந்தேகத்தை எழுப்பும் வகையில் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மல்லிகார்ஜூன கார்கேவை கடுமையாக எச்சரித்துள்ளது.
தேர்தல் ஆணையம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள சுமத்தியுள்ளார். தேர்தல் சுமூகமாகவும் நியாயமான முறையிலும் நடந்து வருவதில் குழப்பத்தையும் தவறான கருத்தை பரப்பி இடையூறுகளை உருவாக்கும் நோக்கில் கடிதம் இருப்பதாக கண்டித்துள்ளது.
சந்தேகங்கள் மற்றும் நல்லிணக்கமின்மை தவிர, அசாதாரண சூழ்நிலையை உருவாக்கலாம். நேரடி தேர்தல் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தின் மீதான ஆக்கிரமிப்பு எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் நடத்தை விதிகளை நேரடியாக பாதிக்கும் எந்தவொரு செயலுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்