search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற 2ம் கட்ட தேர்தல்: 63 சதவீத வாக்குகள் பதிவு
    X

    பாராளுமன்ற 2ம் கட்ட தேர்தல்: 63 சதவீத வாக்குகள் பதிவு

    • 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு.
    • 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு நேற்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 11.1 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 25.1 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 40 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 50.03 சதவீதமும், 5 மணி நிலவரப்படி 64 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

    தொடர்ந்து, இரவு 8 மணி நிலவரப்படி 88 தொகுதிகளில் மொத்தம் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொடர்ந்து, 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.

    Next Story
    ×