search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கடைசி வரை போராடிய வெங்கடேஷ் அய்யர்- மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா
    X

    கடைசி வரை போராடிய வெங்கடேஷ் அய்யர்- மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா

    • கொல்கத்தா அணி தரப்பில் வெங்கடேஷ் அய்யர் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • மும்பை தரப்பில் துஷாரா, பும்ரா 3 விக்கெட்டும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சால்ட் 5, சுனில் நரேன் 8 என வெளியேறினர். அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி 13, ஷ்ரேயாஸ் அய்யர் 6, ரிங்கு சிங் 9 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் கொல்கத்தா அணி 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து வெங்கடேஷ் அய்யர் மற்றும் இம்பேக்ட் பிளேயராக வந்த மனிஸ் பாண்டே ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் குவித்தது.

    பொறுப்புடன் ஆடிய மனிஷ் பாண்டே 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஸல் 7 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதிவரை அதிரடி காட்டிய வெங்கடேஷ் அய்யர் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் துஷாரா, பும்ரா 3 விக்கெட்டும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    Next Story
    ×