search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை- டோனி குறித்து சிஎஸ்கே நெகிழ்ச்சி பதிவு
    X

    வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை- டோனி குறித்து சிஎஸ்கே நெகிழ்ச்சி பதிவு

    • சிஎஸ்கே அணி நாளை ராஜஸ்தான் அணியை எதிர் கொள்கிறது.
    • இந்த போட்டி சென்னை சேப்பாகத்தில் நடைபெறுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒய்வு பெற்ற டோனி தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரையில் 17 சீசன்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.

    கடந்த சீசனுடன் டோனி ஓய்வு பெறப் போவதாக கூறப்பட்ட நிலையில், இன்னொரு சீசனும் விளையாடுவேன் என்று இந்த சீசனில் விளையாடி வருகிறார். இந்த சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதை தெரிந்து கொள்வதை விட, டோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்ற கேள்வி தான் ஒவ்வொரு ரசிகரிடமும் எழுந்துள்ளது.

    எந்த ஊரில் விளையாடினாலும் சிஎஸ்கே ரசிகர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். இவை அனைத்தும் டோனிக்காக என்பது மிகையாகாது. சிஎஸ்கே தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. டோனி பேட்டிங் செய்தால் மட்டும் போதும் என்ற வகையில் ரசிகர்கள் மைதானத்தில் ஆர்ப்பரிக்கின்றனர்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. ஆனால் கடைசியில் டோனி அடித்த சிக்சரால் அந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்றதா அல்லது டெல்லி அணி வென்றதா என்ற கேள்வி எழுப்பும் வகையில் சிஎஸ்கே ரசிகர்கள் டோனியை கொண்டாடி தீர்த்தனர்.

    இதுமட்டுமல்லாமல் டோனியின் புகைப்படம், வீடியோ என எது கிடைத்தாலும் அது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி விடுகிறது. நேற்றைய போட்டியில் கூட ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து டோனியின் காலில் விழுந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இப்படி டோனி நின்றாலும் நடந்தாலும் அதனை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாகி வருகின்றனர்.

    அந்த வகையில் சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் டோனி குறித்து நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளது. அந்த வாசகம் டோனிக்கு 100 சதவீதம் பொறுத்தமாக இருக்கிறது என ரசிகர்களை அதனை கொண்டாடி வருகின்றனர்.

    அதில் வயது முதிர்ந்த போதிலும்..

    வலிகள் மிகுந்த போதிலும்..

    வலிமை குறைந்த போதிலும்..

    வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!

    என பதிவிட்டிருந்தது.

    இதற்கு முன்பாக சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல என்ற படத்தில் நீ சிங்கம் தான் என்ற பாடல் பத்து தல சிம்புவை விட தல டோனிக்கே உரியதாக ஆகிவிட்டது என்பது போல் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    நாளை நடைபெறும் 61-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் சென்னையில் நடைபெறுகிறது. இதையடுத்து சிஎஸ்கே தனது கடைசி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த 68-வது லீக் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 2 போட்டியிலும் தோல்வி அடைந்தால் சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும். டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் எஞ்சிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×