search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    அதிக அம்சங்கள் கொண்ட i20 புது வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்
    X

    அதிக அம்சங்கள் கொண்ட i20 புது வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்

    • டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட சன்ரூஃப் உள்ளது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது i20 ஹேச்பேக் காரின் புதிய ஸ்போர்ட்ஸ் (O) வேரியன்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஸ்போர்ட்ஸ் ட்ரிமை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் ஹூண்டாய் i20 ஸ்போர்ட்ஸ் (O) மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 73 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய i20 வேரியன்ட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த கார் சிங்கில் மற்றும் டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டூயல் டோன் விலை ரூ. 8 லட்சத்து 88 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


    இது வழக்கமான ஸ்போர்ட்ஸ் வேரியன்டை விட ரூ. 35 ஆயிரம் வரை அதிகம் ஆகும். கூடுதல் விலைக்கு இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர், கதவின் ஆரம்-ரெஸ்ட்-இல் லெதர் ஃபினிஷ், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் i20 மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் iVT யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 82 ஹெச்.பி. பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய ஸ்போர்ட்ஸ் (O) வேரியன்ட் சேர்த்து i20 மாடல் இரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (O) என ஐந்து வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7 லட்சத்து 04 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 11 லட்சத்து 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×