search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    மும்பையில் ஆடம்பர அலுவலகம்.. இந்திய என்ட்ரியை உறுதிப்படுத்திய டெஸ்லா..!
    X

    கோப்புப் படம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மும்பையில் ஆடம்பர அலுவலகம்.. இந்திய என்ட்ரியை உறுதிப்படுத்திய டெஸ்லா..!

    • உலகளாவிய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டெஸ்லா நிறுவனம் பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    • முன்னதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அமெரிக்காவை சேர்ந்த முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா இந்திய சந்தையில் களமிறங்குவதற்கு சமீபத்தில் தான் மீண்டும் விருப்பம் தெரிவித்து இருந்தது. தற்போது இதன் தொடர்ச்சியாக டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்குவதற்கான அடுத்த முயற்சியாக மும்பையில் அலுவலகம் ஒன்றை லீசுக்கு எடுத்திருக்கிறது.

    டெஸ்லா இந்தியா மோட்டார் & எனர்ஜி பிரைவேட் லிமிடெட் பெயரில் லீசுக்கு எடுக்கப்பட்டு இருக்கும் புதிய அலுவலகம் பூனேவின் பன்ஷில் பிஸ்னஸ் பார்க்-இல் அமைந்து இருக்கிறது. இந்த அலுவலகத்திற்கு மாத வாடகை மட்டும் ரூ. 11 லட்சத்து 65 ஆயிரம் என்று கூறப்படுகிறது. கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள 5 ஆயிரத்து 850 சதுர அடி பரப்பளவு கொண்ட பகுதியில் டெஸ்லா இந்தியா அலுவலகம் உருவாகிறது.

    வாடகை ஒப்பந்தம் அக்டோபர் 1-ம் தேதி துவங்குகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அலுவலகத்துக்கான இடம் லீசுக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றிருந்த சமயத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டெஸ்லாவை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்து இருந்தார்.

    உலகளாவிய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டெஸ்லா நிறுவனம் பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கமான பெட்ரோல், டீசல் என்ஜின் கொண்ட கார்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார்களை பயனர்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததில் டெஸ்லா நிறுவனம் பெரும் பங்காற்றி இருக்கிறது.

    Next Story
    ×