search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனாவில் டிரம்ப்: 9 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
    X

    சீனாவில் டிரம்ப்: 9 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

    ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மூன்று நாட்கள் பயணமாக நேற்று சீனாவுக்கு சென்றடைந்த நிலையில், 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
    பீஜிங்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு 21 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக ஜப்பான் சென்ற அவர் அங்கு பிரதமர் அபே உடன் வடகொரியா விவகாரம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதனையடுத்து, தென்கொரியா சென்ற அவர் அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினார். இந்நிலையில், மூன்று நாள் பயணமான சீனாவுக்கு நேற்று வந்தடைந்தார். அவருடன் மனைவி மெலினா டிரம்ப் உள்பட முக்கிய அதிகாரிகள் வருகை தந்தனர்.

    சீனா அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்திப்பு நடத்திய பின்னர், சுமார் 9 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக சீன துணை பிரதமர் வாங் யங் தெரிவித்துள்ளார். வர்த்தகம், பொருளாதார துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக அவர் கூறினார்.

    சீனாப்பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் வியட்நாம் செல்ல இருக்கிறார். அங்கு நடைபெறும் ஆசிய பொருளாதார உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளார். இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×