search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் பாதுகாப்புடன் வாழ முடியாத மிக மோசமான நகரம் டெல்லி: ஆய்வில் தகவல்
    X

    பெண்கள் பாதுகாப்புடன் வாழ முடியாத மிக மோசமான நகரம் டெல்லி: ஆய்வில் தகவல்

    உலக நாடுகளில் பெண்கள் பாதுகாப்பாக வாழவும், வாழ முடியாத நகரங்கள் குறித்தும் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்திய தலைநகரம் டெல்லி இடம் பெற்றுள்ளது.
    டோக்கியோ:

    உலக நாடுகளில் பெண்கள் பாதுகாப்பாக வாழவும், வாழ முடியாத நகரங்கள் குறித்தும் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 19 மிகப்பெரிய நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    அதில் பெண்கள் வாழ முடியாத மிக மோசமான நகரங்கள் பட்டியலில் தலைநகரம் டெல்லி இடம் பெற்றுள்ளது. இங்கு கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2,155 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இது 67 சதவீதமாகும்.

    கடந்த 2015-ம் ஆண்டு வெளியான அறிக்கையில் இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 4 கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ, பிரேசிலியா ஆகிய நகரங்களும் பெண்கள் வாழ முடியாத மிக மோசமான நகரங்கள் பட்டியலில் உள்ளது.

    பிரேசிலியாவில் இந்த ஆண்டு ஜூலை வரை 2,287 கற்பழிப்புகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டில் (2016) 2,868 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்தன.

    அதே போன்று எகிப்து தலைநகரம் கெய்ரோவும் பெண்களுக்கு எதிரான மிக ஆபத்தான நகரமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இங்கு பெண்கள் அனைத்து விதமான கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர்.

    பெண்கள் வாழ மிகவும் பாதுகாப்பான நகரமாக ஜப்பான் தலைநகரம் டோக்கியோ திகழ்கிறது. லண்டனை பொறுத்தவரை பெண்கள் மிகவும் நன்றாக நடத்தப்படுகின்றனர். அவர்கள் தோழமை உணர்வுடன் மதிக்கப்படுகின்றனர் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரு தலைநகரம் விழாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய தொடங்கியுள்ளன. அங்கு பெண்கள் உடல்நலத்தை பேணி வருகின்றனர்.
    Next Story
    ×