search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பான் பாராளுமன்றத் தேர்தலில் ஷின்சோ அபேவுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக் கணிப்பு
    X

    ஜப்பான் பாராளுமன்றத் தேர்தலில் ஷின்சோ அபேவுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக் கணிப்பு

    ஜப்பானில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷின்சோ அபேவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
    டோக்கியோ:

    ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் பதவிக்காலம் ஓராண்டில் நிறைவடைய உள்ளது. ஆனால், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்ட அசாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த பிரதமர் ஷின்சோ அபே தீர்மானித்தார்.

    வடகொரியாவுக்கு எதிரான ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நடவடிக்கை குறித்து நடத்தப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 44 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு வெறும் எட்டு சதவீதம் மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.

    எனவே, மக்கள் செல்வாக்கு உள்ளபோதே பாராளுமன்ற தேர்தலை நடத்தி மீண்டும் பிரதமராக தீர்மானித்த ஷின்சோ அபே பாராளுமன்றத்தின் கீழவையை (பிரதிநிதிகள் சபை) கடந்த மாதம் கலைத்தார். இதையடுத்து அக்டோபர் மாதம் 22-ம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் லிபரல் குடியரசு கட்சிக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும்தான் நேரடி போட்டி உள்ளது.

    வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதில், முக்கிய நாளிதழான மைனிச்சி நடத்திய கருத்துக்கணிப்பில் ஷின்சோ அபே மீண்டும் பிரதமர் ஆவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 73 ஆயிரம் வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

    மொத்தம் 465 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்ற கீழவையில் ஷின்சோ அபே கட்சிக்கு 281 முதல் 303 உறுப்பினர்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. கூட்டணி கட்சியான கொமீட்டோ 33 முதல் 33 இடங்களைப் பிடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×