search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் முதல் மெட்ரோ ரெயில் சேவை: இன்று தொடங்குகிறது
    X

    பாகிஸ்தானில் முதல் மெட்ரோ ரெயில் சேவை: இன்று தொடங்குகிறது

    பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் அந்நாட்டின் முதல் மெட்ரோ ரெயில் சேவையை பஞ்சாப் மாகாண முதல் மந்திரி ஷாபாஸ் ஷரிப் இன்று தொடங்கி வைக்கிறார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் முக்கிய தலைநகரான லாகூரில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க அம்மாகாண அரசு கடந்த 2013-ம் ஆண்டு தீர்மானித்தது. சீன நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் இதற்காக தனிப்பாதை அமைக்கப்பட்டது.

    27.1 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பாதையில் முதல்கட்டமாக இரண்டு என்ஜின்களுடன் மூன்று பெட்டிகளை இணைத்து இந்த பாதை வழியாக முதல் மெட்ரோ ரெயில் சேவையை  பஞ்சாப் மாகாண முதல் மந்திரி ஷாபாஸ் ஷரிப் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த பாதையில் செல்வதன் மூலம் இரண்டரை மணிநேர பயண தூரத்தை மெட்ரோ ரெயிலில் வெறும் 45 நிமிடங்களில் கடந்து விடலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் மேலும் 27 ரெயில்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அவற்றில் 23 ரெயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சாரம் மூலம் இயங்கும் இந்த மெட்ரோ ரெயில் முழுவீச்சில் செயல்பட தொடங்கும்போது ஒவ்வொரு ரெயிலிலும் சுமார் ஆயிரம் பேர்வரை பயணம் செய்யலாம்.

    26 நிலையங்களை கடந்து செல்லும் இந்த மெட்ரோ ரெயில்மூலம் அன்றாடம் சுமார் இரண்டரை லட்சம் பயன் பெறுவார்கள். வரும் 2025-ம் ஆண்டுவாக்கில் நாளொன்றுக்கு சுமார் 5 லட்சம் பயணிகள் இந்த மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துவார்கள் என ரெயில்வே அதிகாரிகள் கருதுகின்றனர்.
    Next Story
    ×