search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை குறைக்க வேண்டும்: அமெரிக்கா
    X

    இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை குறைக்க வேண்டும்: அமெரிக்கா

    இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தை இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
    வாஷிங்டன்:

    ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவல் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருகின்றது. ஊடுருவலுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் தீவிரவாதிகள் மற்றும் இராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். 

    இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தை இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. 

    இது தொடர்பாக மாநில துறையின் செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நாவேர்ட் கூறுகையில், இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதை அமெரிக்கா ஊக்குவிக்கிறது. 

    முன்னதாக, ஆப்கானிஸ்தான் நாட்டுடனான கொள்கை குறித்து பேசிய டிரம்ப் தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×