search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசடி வழக்கில் அமெரிக்கா வாழ் இந்தியர் கைது - 40 மாதங்கள் சிறை தண்டனை
    X

    மோசடி வழக்கில் அமெரிக்கா வாழ் இந்தியர் கைது - 40 மாதங்கள் சிறை தண்டனை

    அமெரிக்காவில் தொலைபேசி மூலம் சுமார் 1 கோடி ரூபாய் மோசடி செய்த இந்தியருக்கு 40 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    இந்தியாவைச் சேர்ந்த அனந்த்குமார் ஜெயண்டிலா நயே என்பவர் அமெரிக்காவின் புளோரிடோ நாட்டில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு நாற்பது மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அனந்த்குமாரும் அவரது கூட்டாளிகளும் வருமான வரி அல்லது கடன் செலுத்துவதற்கான சேவை மையத்தை 2014 ஆம் ஆண்டு முதல் நடத்தி வந்தனர். மக்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி அவர்கள் செலுத்த வேண்டிய பணத்தை தங்களின் கட்டுபாட்டில் உள்ள வங்கிக் கணக்கில் போட கூறியுள்ளனர். அவர்களின் பேச்சை நம்பி மக்கள் பணத்தை அனுப்பியுள்ளனர். ஆனால் அனந்த்குமார் அதனை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி பணத்தை எடுத்து பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் அவர்கள் சுமார் 1 கோடி ரூபாய் வரை ஏமாற்றியுள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் புளோரிடோ போலீசார் அனந்த்குமாரை மோசடி வழக்கில் கைது செய்தனர். இந்நிலையில் அவருக்கு 40 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×