search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாலி: ஐ.நா. அமைதிப்படை தலைமையகம் மீது தீவிரவாத தாக்குதல் - 7 பேர் பலி
    X

    மாலி: ஐ.நா. அமைதிப்படை தலைமையகம் மீது தீவிரவாத தாக்குதல் - 7 பேர் பலி

    மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படை தலைமையகம் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
    பமாகோ:

    மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படை தலைமையகம் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

    மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ஐ.நா சபையின் கீழ் செயல்படும் அமைதிப்படை முகாம்கள் உள்ளன. ஆப்ரிக்க நாடுகளில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை அழிக்கும் பணியில் இந்த படை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள நகரான டிம்பக்து-வில் இருக்கும் அமைதிப்படை தலைமையகத்தில் நேற்று அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டான்.

    இந்த தாக்குதலில் 5 மாலி நாட்டைச் சேர்ந்த வீரர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அமைதிப்படையை சேர்ந்த வீரர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவலை உறுதி செய்துள்ள ஐ.நா சபை, நடத்தப்பட்டது தீவிரவாத தாக்குதல்தான் என்று தெரிவித்துள்ளது.

    நேற்று முந்தினம் அந்நாட்டின் மற்றொரு நகரான டோயெண்ட்ஸா-வில் இருக்கும் இரு அமைதிப்படை வீரர்கள் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இரு வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×