search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுக்கடலில் மூழ்கி தத்தளித்த 2 காட்டு யானைகள் மீட்பு: இலங்கை கடற்படை வீரர்கள் உதவி
    X

    நடுக்கடலில் மூழ்கி தத்தளித்த 2 காட்டு யானைகள் மீட்பு: இலங்கை கடற்படை வீரர்கள் உதவி

    கடலில் தத்தளித்த யானைகளை காப்பாற்றிய இலங்கை ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    கொழும்பு:

    இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பகுதியில் உள்ள கடலில் கடற்படை வீரர்கள் படகுகளில் ரோந்து சுற்றி வந்தனர்.

    அப்போது நடுக்கடலில் 2 யானைகள் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்தனர். உடனே அதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டனர். நீரில் மூழ்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் யானைகளின் உடலில் கயிற்றை கட்டினர். பின்னர் அவை கடற்படை படகில் கட்டப்பட்டு கரைக்கு இழுத்து வரப்பட்டது. அதையடுத்து அந்த யானைகள் தண்ணீரில் இருந்து வெளியே நடந்து வந்தது.



    கடலில் தத்தளித்த யானைகளை காப்பாற்றிய ராணுவ வீரர்களை பொதுமக்களும், விலங்கு நல ஆர்வலர்களும் பாராட்டினர்.

    இலங்கையில் தமிழர்கள் அதிக அளவில் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு ஆண்டாக கடும் வறட்சி நிலவுகிறது. அதனால் வனப்பகுதியில் மிருகங்கள் குடிக்க தண்ணீரின்றி தவிக்கின்றன.

    அவ்வாறு தண்ணீர் தேடி வந்தபோது 2 யானைகள் கடலில் தவறி விழுந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காடுகள் உள்ளன. இங்கு 7 ஆயிரம் யானைகள் இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×