search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டன்: தீ விபத்து அபாயத்தால் 5 அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 800 குடும்பத்தினர் அவசரமாக வெளியேற்றம்
    X

    லண்டன்: தீ விபத்து அபாயத்தால் 5 அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 800 குடும்பத்தினர் அவசரமாக வெளியேற்றம்

    லண்டனில் கடந்த வாரம் கிரென்ஃபெல் டவரில் ஏற்பட்ட தீ விபத்து போல அங்குள்ள 5 அடுக்குமாடி குடியிருப்புகளில் விபத்து நிகழலாம் என கருதி அங்கு வசிக்கும் 800 குடும்பத்தினர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் லண்டனின் வடக்கு கென்சிங்டனில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த வாரம் புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 79 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இந்நிலையில், கேம்பன் எஸ்டேட் பகுதியில் உள்ள 5 அடுக்குமாடி குடியிருப்புகளில் இது போன்ற தீ விபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு வசிக்கும் 800 குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டனர். 

    கட்டிடத்தின் வெளியே பூசப்பட்டுள்ள அலங்கார ஓடுகள் எளிதில் தீ பிடிக்கும் வண்ணம் இருப்பதால் அதை நீக்குதல், கட்டிடத்தில் புதைக்கப்பட்டுள்ள கேஸ் மற்றும் மின்சார பைப்புகள் பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் தகுந்த பாதுகாப்போடு அமைக்கப்படும் மற்றும் முறையான தீ தடுப்பு கருவிகள், அவசர வழிகள் ஏற்படுத்தப்படும் என கேம்பன் கவுன்சில் தெரிவித்துள்ளது.



    கிரென்ஃபெல் டவர்

    கேம்பன் எஸ்டேட் குடியிருப்பில் வசிக்கும் மக்களிடம் கூட்டம் நடத்தி இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் ஒரு கட்டிடத்தில் உள்ள மக்களை மட்டுமே வெளியேற்ற நினைத்ததாகவும், பின்னர் ஐந்து கட்டிடங்களிலும் மொத்தமாக மக்களை வெளியேற்றிவிட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடிவெடுத்ததாக கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.

    நான்கு வாரங்கள் இந்த பராமரிப்பு பணி நடைபெறும் எனவும், அதுவரை குடியிருப்பு வாசிகள் தனியார் விடுதியில் தங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கவுன்சில் அறிவித்துள்ளது.

    கேம்பன் கவுன்சிலின் இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பும், உதவிகளும் செய்ய தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரேசா மே டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×