search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்ய அரசு முடிவு
    X

    கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்ய அரசு முடிவு

    கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளை அமைப்பதற்காக ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:

    பிரதமர் நரேந்திர மோடி ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்குமிடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் கூடங்குளத்தில் 5-வது, 6-வது அணு உலைகளை அமைப்பது தொடர்பான ஒப்பந்தமும் ஒன்று.

    இந்த இரண்டு அணு உலைகளையும் அமைப்பதற்கு ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், பாதி தொகையை ரஷியா கடனாக வழங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதுபற்றி இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.கே.ஷர்மா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இந்த இரண்டு புதிய அணு உலைகளும் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். இதில் முதல் அலகில் 66 மாதங்களில் உற்பத்தி தொடங்கும். அடுத்த 6 மாதங்களில் மற்றொரு அலகில் உற்பத்தி தொடங்கும். அணு உலைகள் கட்டுமானப் பணியில், மிகவும் நம்பகமான ரஷியாவின் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

    கூடங்குளத்தில் ஏற்கனவே முதல் இரு அணு உலைகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், 3 மற்றும் 4-வது அணு உலைகளில் மின்சாரம் தயாரிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
    Next Story
    ×