search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் ஜி.கே.மணி பேட்டி அளித்த காட்சி.
    X
    ஈரோட்டில் ஜி.கே.மணி பேட்டி அளித்த காட்சி.

    கவர்னர் ஆய்வு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜி.கே.மணி

    கவர்னர் தனது அதிகாரத்துக்குட்பட்டு செயல்பட வேண்டும். அவர் தொடர்ந்து ஆய்வு செய்வதை ஏற்று கொள்ள முடியாது என்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    முன்னதாக ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    ராஜஸ்தான் மாநிலத்தில் சென்னை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

    படுகொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குற்றவாளிகளை பிடிப்பதில், தண்டனை பெற்று கொடுப்பதில், அறிவுரை கூறி அவர்களை திருத்துவதில் திறமையானவர். அவருக்கு பா.ம.க. சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறோம்.

    வேளாண்மை தொழில் நலிந்து வருகிறது. உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் நீடித்த நிலையான திட்டங்களை சட்டமாக்க வேண்டும். உற்பத்திக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    உற்பத்தி பொருளை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகளும், விற்பனை செய்ய அங்கன்வாடிகளை உருவாக்க வேண்டும். ஈரோடு மாவட்டம் மஞ்சள் உற்பத்திக்கு பெயர் போனது. ஆனால் இன்றே மஞ்சள் உற்பத்தி குறைந்துள்ளது. அதே போன்று கரும்பு விவசாயிகளுக்கு நிலவை தொகையான ரூ.2 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும்.

    தமிழர்களுக்கு தொடர்ந்து காவிரி உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பா.ம.க. சார்பில் கேட்டு கொள்கிறேன்.


    ஆளுநர் தனது அதிகாரத்துக்குட்பட்டு செயல்பட வேண்டும். அவர் தொடர்ந்து ஆய்வு செய்வதை ஏற்று கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். 



    Next Story
    ×