search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா வக்கீல் செந்தில் வீடு முன்பு வருமானவரி துறை அதிகாரிகள் கார் நிறுத்தப்பட்டுள்ள காட்சி.
    X
    சசிகலா வக்கீல் செந்தில் வீடு முன்பு வருமானவரி துறை அதிகாரிகள் கார் நிறுத்தப்பட்டுள்ள காட்சி.

    நாமக்கல்லில் 3-வது நாளாக சோதனை: சசிகலா வக்கீல் செந்தில் அறைக்கு சீல் வைப்பு

    நாமக்கல் கூட்டுறவு காலனியில் உள்ள சசிகலாவின் வக்கீல் செந்தில் வீட்டில் இன்று 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
    நாமக்கல்:

    நாமக்கல் கூட்டுறவு காலனியில் உள்ள சசிகலாவின் வக்கீல் செந்தில் வீட்டில் இன்று 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இவரது வீட்டில் ஒரு அறை பூட்டப்பட்டு உள்ளது. அந்த அறையின் சாவி வக்கீல் செந்திலிடம் உள்ளது. அந்த சாவியை வாங்கி அந்த அறையை திறந்து சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால் வக்கீல் செந்தில் வெளியூரில் இருக்கிறார். அவரை போனில் அதிகாரிகள் தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் அந்த அறைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தாங்கள் நேரில் வந்து மீண்டும் அந்த அறையை திறக்கும் வரை யாரும்அந்த அறைக்குள் போவதை தடுக்க சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    மேலும் 3 நாட்களாக நடந்த ஆய்வில் ஏராளமான சொத்து ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    நேற்று வக்கீல் செந்தில் வங்கி லாக்கரில் இருந்த ஆவணங்களை வக்கீல் செந்திலின் சகோதரி லாவண்யா எடுத்து வந்தார்.

    அந்த ஆவணங்களை வைத்து செந்திலின் உறவினர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதேபோல வக்கீல் செந்திலின் ஜூனியர் வக்கீல் பாண்டியன் மனைவியையும் அதிகாரிகள் வங்கிக்கு அழைத்து சென்று லாக்கரில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    நாமக்கல் முல்லை நகரில் உள்ள வக்கீல் பாண்டியன் வீடு, சேலம் சாலையில் உள்ள பிரகாசம் வீடு, வக்கீல் செந்திலின் தொழில் பார்ட்னரான சுப்பிரமணியம் வசிக்கும் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள வீடு, அவரது அலுவலகம், கோழிப்பண்ணை மற்றும் நாமக்கல் காந்தி நகரில் உள்ள தமிழ்நாடு அரசு தேர்வாணையம் உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி வீடு உள்பட 8 இடங்களில் கடந்த 2 நாட்களாக வருமானவரி சோதனை நடந்தது.

    இன்று 3-வது நாளாக பாண்டியன், பிரகாசம், சுப்பிரமணியம், ஏ.வி.பாலுசாமி ஆகிய 4 பேர் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. ஏ.வி.பாலுசாமி வீட்டிலும் ஒரு அறை திறக்கப்படாமல் உள்ளது. அந்த அறையின் சாவியை அவரின் உறவினர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
    Next Story
    ×