search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரி ஹைடெக் தரத்தில் உயர்த்தப்படும்: தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் அரசு செயலாளர் உறுதி
    X

    அரசு ஆஸ்பத்திரி ஹைடெக் தரத்தில் உயர்த்தப்படும்: தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் அரசு செயலாளர் உறுதி

    அரசு ஆஸ்பத்திரியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற் கொண்டார். ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஹைடெக் தரத்திற்கு ஆஸ்பத்திரி உயர்த்தப்படும் என்று அரசு செயலாளர் உறுதியளித்தார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள பி.ஏ.சி.ஆர்.அரசு மருத்து வமனையில் ஆய்வுப்பணி மேற்கொண்டார்.

    காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் மற்றும் சிகிச்சை பெற வருகைபுரிந்த வெளி நோயாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

    மேலும் தலைமை மருத்துவர் டாக்டர் பாபுஜியிடம் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி இங்கு என்ன என்ன கருவிகள் உடனடியாக தேவைப்படுகிறது எந்த மாதிரியான உதவிகள் வேண்டும் என்பதையும் கலந்தாலோசித்தார்.

    இது குறித்து மருத்துவ தலைமை அரசு செயலாளர் ராதாகிருஷ்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு மூன்று மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள வளர்ந்து வரும் பெரிய நகரமான ராஜபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையை ஹைடெக் மருத்துவமனையாக தரம் உயர்த்தி தர வேண்டும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். அவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையை ஆஞ்சியே கருவியுடனான இருதய சிறப்பு மருத்துவர் உள்ள அனைத்து வசதிகளுடனான ஹைடெக் மருத்துவமனையாக விரைவில் தரம் உயர்த்தி தருவதாக உறுதியளித்ததாக, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    நகரச் செயலாளர் ராம மூர்த்தி,கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் உள்பட பலர் ஆய்வில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×