search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு படிப்படியாக குறைந்து வருகிறது: செயலாளர் ராதாகிருஷ்ணன்
    X

    டெங்கு படிப்படியாக குறைந்து வருகிறது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

    தமிழக பகுதிகளிலும் டெங்கு படிப்படியாக குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார்.
    சென்னை:

    சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அண்டை மாநிலமான கேரளாவில் மழை பெய்து வருவதால் டெங்கு குறைந்து வருகிறது. அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் டெங்கு படிப்படியாக குறைந்து வருகிறது. டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    இது சாக்கடை, கழிவுநீரில் இருந்து உற்பத்தியாகாது. நல்ல நீரில் இருந்து கொசு உற்பத்தியாகி முட்டையிட்டு டெங்கு பரவுகிறது. வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    காய்ச்சல் பாதித்தவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ, அரசு ஆஸ்பத்திரிகளிலோ சென்று சிகிச்சை பெறலாம். டாக்டர் சீட்டு இல்லாமல் சுயமாக மருந்துகள் வாங்கி சாப்பிடக்கூடாது.

    டெங்கு காய்ச்சல் பற்றி பீதி அடைய வேண்டாம். காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டால் எந்த பயமும் இல்லை. தாமதமாக வருவதால் தான் உயிர் இழப்பு ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×