search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்காலில் 65 பேருக்கு டெங்கு காய்ச்சல்: கலெக்டர் தகவல்
    X

    காரைக்காலில் 65 பேருக்கு டெங்கு காய்ச்சல்: கலெக்டர் தகவல்

    காரைக்கால் மருத்துவமனையில் 268 பேருக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 65 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது என கலெக்டர் கூறியுள்ளார்.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட கலெக்டர் கேசவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலுடன் 268 பேர் வந்தனர். அவர்களுக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 65 பேர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 8 பேர்கள் மட்டும் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள்.

    காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×